2023ஆம் ஆண்டில் ஏறக்குறைய 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது என்று சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர்களின் முக்கிய கவனம் 2024 ஆம் ஆண்டாகும்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹரின் பெர்னாண்டோ, அடுத்த சில மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என்றும், பல விமான நிறுவனங்கள் இலங்கைக்குள் பறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கைக்கு இயக்கப்படும் படகுகள் மற்றும் புகையிரதங்கள் உட்பட பல புதிய சேவைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2024 ஆம் ஆண்டில் சுமார் மூன்று மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அடைவதே எமது உண்மையான நோக்கமாகும் என்றும் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
N.S