அரச துறை ஊழியர்கள் 60 வயதிற்குள் ஓய்வு பெறுவதை கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 05) வெளியிடப்பட்டது.
அரசு ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது ஜனவரி 01, 2023 முதல் அமலுக்கு வரும்.
வர்த்தமானி அறிவிப்பின்படி, தகுதிவாய்ந்த அதிகாரியினால் தீர்மானிக்கப்படும் வரையில், அரசியலமைப்பு அல்லது வேறு ஏதேனும் சட்டத்தால் கட்டாய ஓய்வுபெறும் வயதை நிர்ணயிக்கும் சிவில் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
N.S