அடுத்த சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகள் பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, குமார வெல்கம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கிடையில் பகிரப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், மேலும் பல புதிய இராஜாங்க அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மேற்படி அமைச்சுக்களின் தற்போதைய அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு முறையே ஏனைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு ஏனைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியை (SJB) சேர்ந்த பல எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எனவும் அறியமுடிகிறது.
N.S