பிரபல வர்த்தகர் தினேஸ் ஷாப்டர் கொலை தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தினேஸ் ஷாப்டர் பொரளை பொது மயானத்திற்கு செல்வதற்கு முன்னர், அவர் சென்ற சிற்றுண்டிச்சாலை வழமையாக செல்லும் சிற்றுண்டிச்சாலைஇல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 07, ப்ஃளவர் வீதியில் உள்ள தமது வீட்டிலிருந்து பொரளை பொது மயானத்திற்கு பயணித்த தினேஸ் ஷாப்டர் மலலசேகர மாவத்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருவருக்கு தேவையான சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. என்றாலும் அன்றைய தினம் குறித்த சிற்றுண்டிச்சாலையில் அவர் நன்கு அறிமுகமான வாடிக்கையாளர் இருக்கவில்லையென சிற்றுண்டிச்சாலை ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
குறித்த உணவை கொள்வனவு செய்ய சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றது, தினேஷ் ஷாஃப்டரா? அல்லது வேறு நபரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு சிசிரிவி கெமராக்கள் சிற்றுண்டிச்சாலையில் பொருத்தப்பட்டிருக்காமை, விசாரணைகளுக்கு தடையாக உள்ளது.
சிற்றுண்டிகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டையை அவர் பயன்படுத்தினாரா என்பது தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை தினேஷ் ஷாப்டரின் இரண்டு சகோதரர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
N.S