மதுபான விருந்து மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் 30 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் வண.நேருவே சுமணவன்ச தேரர் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளை நேற்று சந்தித்து, பல்கலைக்கழகத்தை மீள திறப்பது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் கலந்துகொண்டார்.
ஹோமாகமவில் உள்ள பௌத்த & பாலி பல்கலைக்கழகத்தின் பகிடி வதை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை டிசம்பர் 19 அன்று மூடப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் செயலாளர் வண.தலாவ தம்மிக்க தேரர் மற்றும் மேலும் இரு மாணவர்களும் இருவேறு சம்பவங்கள் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு, இருவரும் டிசம்பர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
N.S