நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் மூன்று மாவட்டங்களில் 1500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
மாத்தளை, கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 346 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,511 நபர்கள் இந்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக DMC குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று (டிச.25) பெய்த கனமழையால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலைமை காரணமாக 66க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக DMC தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கையின் கிழக்குக் கரை வழியாக நுழைந்து நாட்டைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்குக் கடலுக்கு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
N.S