இலங்கை வந்த கமரூன் ரணிலுடன் சந்திப்பு!

0
198

தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கமரூன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here