முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் டொரிங்டனில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (ஜன.08) மாலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, லசந்த அழகியவன்ன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
N.S