தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து பொலிஸார் திடீர் அறிவிப்பு

0
184

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா என பதிவாகவோ அல்லது உறுதிப்படுத்தப்படவோ இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 175 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக, தொலைபேசி பகுப்பாய்வு, வங்கி பதிவுகள் மற்றும் பெறப்பட வேண்டிய பல்வேறு ஆவணங்கள் பெறப்பட்டு வருவதாகவும் ஏனைய தரவுகளையும் பயன்படுத்தி இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

நேரடி ஆதாரங்களைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இது தற்கொலையா, கொலையா அல்லது வேறு ஏதாவது ஒன்றா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், சந்தேக நபர் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here