Wednesday, October 23, 2024

Latest Posts

முக்கிய செய்திகளின் சாராம்சம் 11.01.2023

  1. அமைச்சரவைப் பேச்சாளரும் அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகருமான கலாநிதி பந்துல குணவர்தன, திறைசேரியில் நிதிப் பற்றாக்குறை உள்ளதாகவும் பொருளாதார நெருக்கடி எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது என்றும் கூறுகிறார். இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் வரி வருமானம் குறைவாக இருக்கும் என்று ஒப்புக்கொள்கிறார். மேலும் பணத்தை அச்சிட முடியாது : நிலைமை சீராகும் வரை கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. நெருக்கடிகளை எதிர்கொள்ள அரசாங்கத்தால் முடியாதுள்ளதாகவும் புலம்புகிறார். கடன் வழங்க யாரும் இதுவரை தயாராகவில்லை என்றும் கூறியுள்ளார்.
  2. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ஷ, ஸ்டாஃப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராக “முறையான மனித உரிமை மீறல்கள்” குற்றச்சாட்டில் கனேடிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது.
  3. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான தமிழ் அரசியல் கட்சிகள் 3 கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 7 நாள் கெடு விதித்துள்ளன: [அ] அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல்: [b] வடக்கு மற்றும் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் விடுவிக்கப்பட வேண்டும். [c] அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்தல்.
  4. அல்-கொய்தாவுக்கு ஆதரவான பயங்கரவாத உதவியாளர் அஹமட் லுக்மான் தாலிபின் வருமானம் ஈட்டும் நிறுவனத்துடன் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் ரத்தினக் கல் நிறுவனம், தாலிப் கைது செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து அவருடன் வியாபாரம் செய்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
  5. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அனைத்து அமைச்சுக்களின் முன்மொழிவுகளின் கீழ் மதிப்பிடப்பட்ட செலவினங்களில் 5% குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
  6. சமுர்த்தி கொடுப்பனவை வழங்குவது 1 அல்லது 2 வாரங்கள் தாமதமாகலாம் என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்: அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அல்லது நலன்புரிப் பலன்கள் வழங்குவது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
  7. பொது நிர்வாக அமைச்சு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்துகிறது: சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அந்த கடிதத்தை வாபஸ் பெற்றுள்ளது.
  8. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபை, கண்டி மாநகர சபை மற்றும் புத்தளம் நகர சபை ஆகியவற்றில் யானை சின்னத்தில் போட்டியிட ஐ.தே.க மற்றும் SLPP பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
  9. ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் பங்கேற்பு மற்றும் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த்திய குழு, விளையாட்டு அமைச்சரிடம் அறிக்கையை ஒப்படைத்தது: நிதி முறைகேடு, சமூக ஊடகங்களின் வெளியான தகவல்கள், மதப் பிரிவினரின் செல்வாக்கு மற்றும் பலவற்றின் அவதானிப்புகள் அடங்கிய வகையில் இந்த குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  10. இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை: இந்தியா – 373/7 (50): இலங்கை – 306/8 (50), தசுன் ஷனகா – 108 *.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.