பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குமாறு ஆளுங்கட்சிக்குள் போர்க்கொடி!

Date:

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

இதன்படி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு பாராளுமன்றத்தில் பிரேரணையை சமர்ப்பிக்க தயாராக உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில், மின் கட்டணத்தை திருத்துவதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் இடமளிக்க மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும் எனவும் மின்சார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டை நீடிக்கக் கூடாது என்றும், மின் கட்டணத்தை திருத்துவதற்கு பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அனுமதிக்காவிட்டால், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, இது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...