75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட கைதிகள் நாளை (பிப்.04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அதன்படி 588 கைதிகள் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படவுள்ளதுடன், சிறைத்தண்டனையின் போது நல்ல நடத்தையை வெளிப்படுத்தியதாகக் கருதப்படும் 31 கைதிகளின் விடுதலையும் சிறைச்சாலைச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த 31 கைதிகளும் நாளை விடுவிக்கப்படுவார்கள் என ஏக்கநாயக்க தெரிவித்தார்.
N.S