13 ஆவது திருத்தம் தொடர்பில் ரணிலுடன் பேசிய இந்திய இராஜாங்க அமைச்சர்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இந்தியாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள முரளிதரன் நேற்றுக் காலை இலங்கை வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....