ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழில் மேற்கொள்ளும் சுதந்திர தின நிகழ்வுகளிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஆகியோர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நகரின் வைத்தியசாலை வீதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை இ.போ.ச பேரூந்து நிலையம் முன்பாக பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.
இதன்போது போராட்டம் தொடர்ந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்னம் சுகாஸ் உட்பட ஆறுபேர் பொலிசாரினால் அமத்திப் பிடித்து வாகனங்களில் வலுக் கட்டாயமாக கொண்டு சென்றனர்.
இதேநேரம் மணிக்கூட்டு வீதி சந்திக்கும் வைத்தியசாலை வீதி முன்பாக சிவாஜிலிங்கம் தலைமையில் ஓர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதனால் அங்கும் பொலிசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் நகரின் மத்தியில் தொடர் பதற்றம் நிலவுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடித்து விரட்டப்பட்டதோடு வீதியில் நின்ற ஊடகவியலாளர் மோட்டார் சைக்கிலும் சேதமடைந்தது. இந்தப் போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் நீடித்தது.