மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டம்

Date:

“மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின்பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும். நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட அவதானம் செலுத்தியுள்ளோம். மின்கட்டண அதிகரிப்பு நாட்டு மக்களுக்கு மரண தாக்குதலாக அமையும்.”

  • இவ்வாறு துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இலங்கை மின்சார சபை தனது நீண்ட கால நட்டத்தை ஈடுசெய்வதற்காக இவ்வருடத்தில் மேலதிகமாக 288 பில்லியன் ரூபாவை திரட்டிக் கொள்ள உத்தேசித்துள்ளது. கடந்த ஐந்து மாத காலத்துக்குள் இருமுறை மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 65 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசு உணர்வுபூர்வமாகச் செயற்படுவதில்லை. தன்னிச்சையாகச் செயற்படும் அரசுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தொழிற்சங்கங்களால் மாத்திரம் தனித்துச் செயற்பட முடியாது.

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம். தொழிற்சங்கப் போராட்டத்துக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தாய்லாந்தில் கைதான முக்கிய புள்ளி

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு, தாய்லாந்தில் சமூக ஊடக ஆர்வலர்...

ஹொரணையில் ஒருவர் சுட்டுக் கொலை

ஹொரணை, 12 ஏக்கர்ஸ், சிரில்டன் வட்ட பகுதியில் நேற்று (02) இரவு...

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...