நீதியமைச்சர் அலி சப்ரியை அவமதிக்கும் வகையிலான அல்லது அவதூறான கருத்துக்களை வெளியிட மாட்டோம் என ‘சிங்களே’ அமைப்பின் தலைவர் மெடில்லே பன்னலோக தேரர் உறுதியளித்துள்ளார்.
மதில்லே பன்னலோக தேரர் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரங்கப்படுத்தியதாக அமைச்சர் அலி சப்ரியினால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (19) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடாக 1500 மில்லியன் ரூபாவை வழங்குமாறும் அமைச்சர் கோரியிருந்தார்.
அமைச்சரிடம் மட்டில் பன்னலோக்க மன்னிப்பு கோரியதன் மூலம் இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வழக்கு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி அருண அலுத்கே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இரு தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதால் வழக்கை முடித்துக் கொள்வதற்கு இணக்கம் தெரிவிப்பதாக இருதரப்பு சட்டத்தரணிகளும் தெரிவித்தனர்.