எரிபொருள் இல்லை, மீண்டும் சப்புகஸ்கந்த முடங்கியது!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்தவிலுள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலும் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் எண்ணெய்க் கையிருப்பு நேற்றிரவு 8 மணி வரை மட்டுமே இருந்ததாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் நிறுத்தப்பட்டதால் தேசிய மின் வாரியமானது 100 மெகாவோட் திறனை இழந்துள்ளது.
இதேவேளை, டீசல் தட்டுப்பாடு காரணமாக செயலிழந்த களனி திஸ்ஸ அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான டீசல் கையிருப்பு நேற்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.