ஹபரதுவாவில் குஷ் என்று அழைக்கப்படும் 16 கிலோ போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபரதுவாவில் உள்ள ஹிட்டியானகல, தல்பே மற்றும் பிடிடுவா பகுதிகளில் நடந்த மூன்று தனித்தனி சோதனைகளின் போது இவ்வாறு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
21 முதல் 46 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இன்று காலி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவர்களை முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
N.S