அதானியின் திட்டங்களைப் பற்றி நாங்கள் பீதியடையவில்லை!

0
181

இலங்கையில் அதானி திட்டங்களை “அரசாங்கத்துடனான ஒரு வகையான ஒப்பந்தமாக” கொழும்பு பார்க்கிறது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வட இலங்கை காற்றாலை திட்டம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அதானி குழுவை அடையாளம் காட்டியது இந்திய அரசுதான். .

அதானி துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் $140 பில்லியன் வீழ்ச்சியடைந்த போதிலும் வலுவான அடிப்படைகள் உள்ளன. எமது அரசாங்கம் “மிகவும் நம்பிக்கையுடன்” உள்ளது.

700 மில்லியன் டாலர் கொழும்பு மேற்கு கொள்கலன் துறைமுகத் திட்டமும் உள்ளடங்கிய அதானி குழுமத்தின் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது. எனவே, நாங்கள் பீதி அடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து MEA இன் ரைசினா உரையாடல் மாநாட்டில் பங்கேற்றார். பொருளாதார நெருக்கடியில் இந்தியாவின் உதவிக்கு இலங்கை நன்றி தெரிவிப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டாலர் கடன் பொதியைப் பெற இந்தியா பங்களிப்பை வழங்குவதாகவும், அதன் பொருளாதார மீட்சியின் அடுத்த கட்டத்தில் அதிக இந்திய முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் அலி சப்ரி கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here