பணிப்புறக்கணிப்புகளால் பொருளாதாரமே வீழ்ச்சியடையும்!

Date:

பணிப்புறக்கணிப்புப் போராட்டங்கள் பொருளாதார நிலைமையைக் குழப்பிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.வீரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டின் பொருளாதார நிலைமை கட்டங்கட்டமாக முன்னேறி வருகின்ற நிலையில் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள்; பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள். இந்தச் செயற்பாடுகள் பொருளாதார நிலைமையைக் குழப்பிவிடும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் கஷ்டப்பட்டு நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் இந்த மாதிரியான ஆர்ப்பாட்டங்களை – பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களை நிறுத்த வேண்டும்.

தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எமது மொட்டுக் கட்சியின் நிலைப்பாடு. நாங்கள் மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் அண்மையில் கூடி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் நடப்பதற்கு முன் சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் நல்லது என்பதே எனது நிலைப்பாடாகும். மருந்து தட்டுப்பாடுகள் உள்ளன. இன்னும் பல பொருளாதார பிரச்சினைகள் உள்ளன.

இவற்றையெல்லாம் தீர்த்துவிட்டு தேர்தலுக்குச் சென்றால் நல்லா இருக்கும் என்பதே எனது நிலைப்பாடாகும். இது அரசைக் கவிழ்க்கும் தேர்தல் இல்லையே.

உள்ளூராட்சி சபைத் தேர்தலால் மக்களின் பிரச்சினைகள் தீருமாக இருந்தால் இந்தத் தேர்தலை நடத்தினால்
நல்லது.

ஒரு சிலர் பயங்கரவாதிகள் போல் செயற்பட்டதால்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இனியும் இதற்கு இடமளிக்கக்கூடாது.” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...