‘‘கோட்டகோகம’வில் முதலாவது குடிசையை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கவே அமைத்திருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காலி முகத்திடலில் உள்ள போராட்ட இடத்தை அகற்ற வேண்டாம் என அப்போதைய பிரதமர் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார். எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் போராட்டத்தை தாக்க ஆரம்பித்தார் எனவும் அவர் இன்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
N.S