இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையில் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் வழிமுறைகளை வகுக்க தென்னாபிரிக்காவுடன் இலங்கை கூட்டு செயற்குழுவை நிறுவும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுஆகியோர் தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்,
நிறவெறி முடிவுக்கு வந்த பின்னர் தென்னாபிரிக்க அதிகாரிகள் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வந்தனர்.
பல்வேறு இன சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதும் இந்த திசையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் அடங்கும் என இலங்கை முன்னதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவித்திருந்தது.
தென்னாபிரிக்கத் தலைவர்கள் இத்தகைய பொறிமுறையின் ஊடாக நல்லிணக்கத்திற்கான அணுகுமுறை குறித்து தன்னுடன் பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் சப்ரி கூறியுள்ளார்.
தென்னாபிரிக்காவின் நுண்ணறிவுகளின் அடிப்படையில் இலங்கையில் பொறிமுறையை அமைப்பதற்கு ஒரு செயற்குழு நியமிக்கப்படும். தென்னாப்பிரிக்க அதிகாரிகள் தங்கள் அனுபவத்தையும், அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கையின் அரசியலமைப்பு விதிகளின்படி எந்தவொரு பொறிமுறையும் ஸ்தாபிக்கப்படும் என்பதுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) கையெழுத்திடப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
N.S