புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம், கடும் விமர்சனத்திற்கு உள்ளான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிக்கவும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தவும் உள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது ஒரு தற்காலிக நடவடிக்கையாக 1979 இல் PTA நடைமுறைக்கு வந்ததுடன் பின்னர் அது 1982 இல் நிரந்தர சட்டமாக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
N.S