நாட்டில் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு தேர்தல் ஆயினும் தேசிய மக்கள் சக்தி 50% க்கும் அதிகமான வாக்குகளை இல்லாவிடின் 10% க்கும் குறைவான வாக்குகளையே பெறும் என அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்குத் தெரியும் என்றும் உளவுப் பிரிவினர் நடத்திய கருத்துக்கணிப்பு அறிக்கையில் கூட இந்த பெறுபேறுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்றுவரும் இந்த மோசமான ஆட்சியை அகற்றி மக்கள் எதிர்பார்க்கும் தூய்மையான ஆட்சியை உருவாக்க வேண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
N.S