ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக அரசரதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் உட்பட பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தில் பலம் வாய்ந்த பதவியை வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் பணியை முன்னெடுத்துள்ளதாகவும், இதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட ரீதியில் சிலருடன் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
N.S