வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் டொலர்களின் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாத்திரம் 568.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வௌிநாட்டு வாழ் இலங்கையர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது மார்ச் 2022இல் 318.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
2022ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வௌிநாட்டு வாழ் இலங்கையர்கள் மூலம் 782.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு கிடைத்த நிலையில் 2023ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் அந்த தொகை 1413.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதென மத்திய வங்கி கூறியுள்ளது.
N.S