சூரியனின் வடக்கு நோக்கிய சார்புடைய நகர்வில், நல்லூர், பரந்தன் மற்றும் சுண்டிக்குளம் பகுதிகளில் நண்பகல் 12.10 மணியளவில் அது நேராக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் சூரியன் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக நகரத் தொடங்கியதாகவும், இந்த வருடம் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை அது தொடரும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.