பேருந்துகளில் ‘ஜிபிஎஸ் டிராக்கிங் அமைப்பு’ அறிமுகம்!

0
206

நாட்டில் இயங்கும் 1,500 க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு ஜிபிஎஸ் பஸ் கண்காணிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்தி டிஜிட்டல் மயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

”டிஜிட்டல் மயமாக்கல் பஸ்ஸின் சரதி இருக்கும் இடத்தை கண்காணிக்க உதவும், பஸ்ஸின் துல்லியமான ஓட்டும் வேகம் ஆய்வு செய்யப்பட்டு தொழில்நுட்ப தரநிலைகள் பஸ்ஸால் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யும், மேலும் ஏதேனும் போக்குவரத்து மீறல்கள் விபத்துகளை கண்டறிய உதவும். ஜிபிஎஸ் அமைப்பை பேருந்தில் இருந்து அகற்ற முடியாது. அவ்வாரு அகற்றினால் கண்காணிப்பு பிரிவில் சேகரிக்கப்படும் தகவல்களின் மூலம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here