இலங்கையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை (21) அனுசரிக்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நாடு முழுவதும் இலக்குவைக்கப்பட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது இந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இன்னமும் இந்த தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரிகள் யாரென கண்டறியப்படவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக கத்தோலிக்க திருச்சபை சுயாதீன விசாரணைக்கு தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்து வருகிறது. அரசாங்கத்தின் விசாரணைகள் போதுமானதாக இல்லை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை கத்தோலிக்க திருச்சபை கூறுவதுடன் தாக்குதல்களுக்குப் பின்னரான அரசாங்கத்தின் விசாரணை பொறிமுறைகளை கத்தோலிக்க திருச்சபை விமர்சித்து வருகிறது.
N.S