ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார்!

0
171

ஐக்கிய தேசியக் கட்சி இந்த வருடம் நடத்தும் மே தின கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக தாம் செயற்படுவைத்தால் மே தின பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என கட்சியின் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களுடன் இணைந்து மே தினத்தை கொண்டாட திட்டமிடுமாறு ஜனாதிபதி குழு பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தமது மே தினக் கூட்டத்தை இம்முறை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here