அக்குரணை மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக 118 என்ற அவசர தொலைபேசி இலகத்துக்கு இரண்டு முறை பொய்யான அழைப்புகளை விடுத்த 21 வயதான மௌலவி மே 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து சைபர் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் இன்று காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஹரிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபர், தான் வழங்கிய தகவல் போலியானது என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேக நபர் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இவ்வாறு இரண்டு பொய்யான அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இவரின் போலியான எச்சரிக்கையை அடுத்து அக்குறணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
N.S