கடுமையான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா , வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இவ்வாறு கடும் மழை பெய்யக்கூடும்.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
எனவே, பொதுமக்கள் மழை மற்றும் இடி, மின்னலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய 19 மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
N.S