அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை குறையுமென அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாகவே இந்தச் சலுகையை வழங்க முடிவு செய்யத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது.
நீண்ட கலந்துரையாடலை தொடர்ந்து, தேவையான கால்நடை உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யவும் விலையை குறைக்கவும் அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியது. கால்நடை உணவுகள் குறைந்த விலையில் கிடைத்தால், அந்த நன்மை மக்களுக்கே கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
N.S