சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் (EFF) ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் முதல் மூன்று நாள் விவாதத்தைத் தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்த தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 120 பேரும் எதிராக 25 பேரும் வாக்களித்தனர்.
இதன்மூலம், 95 பெரும்பான்மை வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் முக்கிய விடயங்கள் சட்டமாக இயற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
N.S