காணி தொடர்பான ஆவணங்கள் பல மாயம்

0
230

2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், ஆணைக்குழுவின் அதிகாரிகள் அண்மையில் குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தமையும் பொது அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் தெரியவந்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த அறிக்கையின் பின்னர் கோப் குழு வருடாந்த அறிக்கைகளை சமர்பிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படாமை குறித்து அக்குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார விசனம் தெரிவித்துள்ளார்.

கடந்த கூட்டத்தில் குழு பரிந்துரைத்த போதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் காணாமல் போன கோப்புகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தலைவர் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here