01 மே 2023 அன்று சர்வதேச தொழிலாளர் தினத்தை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடவும், சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரித்து பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவிக்காமல் உறுதுணையாக இருந்து ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினப் பேரணிகளை நடத்திய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்.
மே தினக் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிடுகின்றார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பெரும் தியாகத்துடன் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.