இங்கிலாந்து மன்னராக முடி சூடும் 3ம் சார்லஸ்!

0
247

இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின் முடிசூட்டு விழா இன்று (6-ஆம் திகதி) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவை உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த பக்கிம்காம் அரண் மனை நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த கோலாகல விழாவை காண ஒட்டு மொத்த இங்கிலாந்தும் தயாராகி இருந்தது. லண்டன் நகரமும் விழாக்கோலம் பூண்டு உள்ளது.

இந்நிலையில் சற்றுமுன் 3-ம் சார்லஸ் மன்னராக முடி சூடும் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

1981-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் திகதி சார்லஸ்-மறைந்த டயானா திருமண நிகழ்ச்சி அனைவரும் வாய்பிளந்து பார்க்கும் வகையில் அமைந்து இருந்தது. இதேபோல சார்லஸ் மற்றும் அவரது 2-வது மனைவி கமீலா முடிசூட்டு விழா இதுவரை நடைபெறாத வகையில் மிகபிரம்மாண்டமாக ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் இங்கிலாந்து மன்னர் சார்லசை அழைத்து வர பாரம்பரியமிக்க சாரட்டு வண்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாரட் வண்டி நான்காம் வில்லியம் ஆட்சி நடந்த 1831-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு முடிசூட்டு விழாவின் போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1953-ம் ஆண்டு இந்த சாரட் வண்டியில் தான் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சாரட் வண்டி சுமார் 7 மீட்டர் நீளமும், 3 மீட்டர் உயரமும் கொண்டது. 4 டன் எடை கொண்ட இந்த சாரட் முற்றிலும் தங்க மூலாம் பூசப்பட்டதாகும்.

இந்த விழாவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். உலக தலைவர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு நிறுவனம், சமூக குழுக்களை சேர்ந்த 850 பிரதிநிதிகள், இங்கிலாந்து பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக், அவரது மனைவி அக்ஷரா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here