கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாறாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இறக்கு கண்டனத்தை வெளியிடவுள்ளதாகவும் தமிழ்த் தேசியப் பேரவை தெரிவித்துள்ளது.
அரசின் பூரண அனுசரணையுடன் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழித்து வரலாற்றைத் திரிபுபடுத்தும் நோக்கில் இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தமிழ்த் தேசியப் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
கட்டமைக்கப்பட்ட மரபுரிமைசார் இனவழிப்பு செயற்பாடிற்கு எதிராகவே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. தமிழர் வாழ்வுரிமை மையம் மற்றும் கந்தரோடை சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய உணர்வாளர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கந்தரோடையில் நாளை (07-05-2023) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு போராட்டம் இடம்பெறவுள்ளதகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
N.S