பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் நோயாளர் காவு வண்டியொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.நோயாளர் காவு வண்டியின் சாரதியை இனந்தெரியாத நால்வர் சுட முயற்சித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் நோயாளர் காவு வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.