நதாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Date:

நகைச்சுவை நடிகை நதாஷா எதிரிசூரிய மற்றும் ‘SL VLOG’ யூடியூப் சேனலின் உரிமையாளர் புருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகை நதாஷாவின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத்துறை கடந்த மே 31 ஆம் திகதி அவரை கைதுசெய்தது. SL VLOG’ உரிமையாளரை அன்றையதினம் குற்றப் புலனாய்வுத்துறை கைதுசெய்தது.

நதாஷா எதிரிசூரிய கடந்த மே 28 அன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நாட்டை விட்டு வெளியேற முயன்றபோதே CID யினர் அவரை கைது செய்தனர்.

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி பாடசாலை ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியில், பல மதங்களை அவமதித்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...