Friday, May 9, 2025

Latest Posts

கிழக்கு மற்றும் மலையக சுற்றுலாத் தளங்களை முன்னேற்றுவது தொடர்பில் ஜப்பான் அரசாங்கத்துடன் செந்தில் தொண்டமான் பேச்சு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு ஆளுநர் இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இருதரப்பு வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார்.

ஜப்பானில் உள்ள மியாசாகி கடற்கரைக்கு வருகைதரும் உலாவர்கள்(sufers) ஊடாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த உலாவல் இடங்களில் (surf spot) ஒன்றாக அருகம்பே கடற்கரையை ஊக்குவிக்க கடற்கரை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.

அதேபோல், அருகம்பே போன்ற உலாவல் இடங்களில் (surf spot) சமமான ஆற்றலைக் கொண்ட ஜப்பானின் மியாசாகி கடற்கரையை ஊக்குவிப்பது போல், அருகம்பே கடற்கரையை உள்ளூர் அதிகாரிகளால் சர்வதேச உலாவர்களுக்காக (Surfers) ஊக்குவிக்கப்படும் என தெரிவித்தார்.

அருகம்பே கடற்கரையை சர்வதேச உலாவர்களுக்கு (Surfers) ஊக்குவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஷிம்பேய் மட்ஷிதா ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவது குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார். அதற்கும் ஷிம்பேய் மட்ஷிதா தனது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.