இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் உள்நாட்டு LITRO எரிவாயு சிலிண்டர்களின் விலை 204 ரூபாவால் குறைக்கப்படும் என LITRO லங்காவின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் புதிய சில்லறை விலை ரூ. 2,982.
5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.83 குறைக்கப்பட்டு புதிய சில்லறை விலை ரூ.1,198 ஆக இருக்கும்.
2.3 கிலோ சிலிண்டர் ரூ.37 குறைக்கப்பட்டு புதிய சில்லறை விலை ரூ.561 ஆக இருக்கும்.
உலக சந்தையில் விலை குறைவடைந்தமை மற்றும் எல்.பி எரிவாயு பெருமளவு கையிருப்பு பெறப்பட்டமை போன்ற பல கணிசமான காரணங்களால் இந்த பாரிய விலை குறைப்புக்கான காரணம் என முதித பீரிஸ் தெரிவித்தார்.
நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA), ஜனாதிபதி செயலகம் மற்றும் LITRO லங்கா லிமிட்டெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகளை அடுத்து, தற்போதுள்ள எரிவாயு விலை சூத்திரத்தில் புதிய சேர்க்கப்பட்ட அம்சங்களைத் தொடர்ந்து இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.