லொத்தர் சீட்டு விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு

Date:

இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் லொத்தர் சீட்டுகளின் விலையை அதிகரிக்க தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன செயற்பட்டுள்ளன.

அதன்படி, ரூ.20 ஆக இருந்த லாட்டரி சீட்டின் புதிய விலை ரூ.40 ஆக இருக்கும். அதிக விலை காரணமாக லொத்தர் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், விலை அதிகரிப்புக்கு ஏற்ப நுகர்வோரின் வெற்றி வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் சந்தைப்படுத்தல் உதவி பொது முகாமையாளர் மெனுர சதுரங்க தெரிவித்தார்.

இதேவேளை, விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது கொமிஷன் அதிகரிக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் லொத்தர் விற்பனையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லொத்தர் விலையை அதிகரிப்பதன் காரணமாக லொத்தர் விற்பனையில் பிரச்சினை ஏற்படுவதுடன் லொத்தர் விற்பனை குறையலாம் என சங்கத்தின் தலைவர் கிருஷாந்த மரம்பகே தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...