அரச தரப்பு பிரேரணைக்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா கண்டனம்

0
144

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை தேர்தலை நடத்தாமல் மீண்டும் அமைப்பதற்காக மொட்டுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெடகொட பாராளுமன்றத்தில் முன்வைத்த ஜனநாயகத்திற்கு முரணான தனியார் பிரேரணையை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் வன்மையாக கண்டிக்கிறது.

இது குறித்து ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

இது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மக்களின் இறையாண்மையை பாதிக்கக்கூடியது என TISL நிறுவனம் நம்புகிறது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் அடிப்படை/கீழ் மட்டத்திலான பிரதிநிதிகளாவர். மக்கள் ஆணையானது உள்ளூராட்சி அதிகார சபைகளில் சரியாக பிரதிபலிக்க வேண்டுமாயின் முறையான தேர்தல்கள் இன்றியமையாதவை ஆகும்.

அதேபோன்று இந்தத் திருத்தங்கள் ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன, அதாவது, தேசிய அளவிலான தேர்தல்கள் உட்பட உரிய காலத்தில் இடம்பெற வேண்டிய தேர்தல்களையும் தடுக்க இது போன்ற சட்ட கட்டமைப்பை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய மோசமான நிலைமையினை உருவாக்குகிறது.

இவ்வாறான செயற்பாடானது நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையினை வலுவிழக்கச் செய்யும்.
இந்தத் திருத்தங்களை நிறைவேற்ற மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் தோற்கடிக்கப்பட வேண்டும் TISL நிறுவனம் வலியுறுத்துகிறது.

இந்த நடவடிக்கையினை எதிர்த்து நாட்டு மக்களின் வாக்குரிமையினை வென்றெடுக்க ஒன்றிணையுமாறு அனைத்து பிரஜைகளுக்கும் TISL நிறுவனம் அழைப்பு விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here