நாட்டின் பொலிஸ் மா அதிபர் பதவி 13 நாட்கள் வெற்றிடமாக உள்ளது. அது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த பின் வெற்றிடம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிபரை நியமிக்க வேண்டுமா அல்லது சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு வழங்கப்படுமா என்பதை தீர்மானிக்குமாறு ஜனாதிபதி அமைச்சர் டிரான் அலஸுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி நாளை (09) பிற்பகல் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கிடையில் மற்றுமொரு விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும், அங்கு பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.