83, கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் பிரித்து விட வேண்டாம்!ஒன்றாக நாங்கள் பறக்கிறோம் !! என்ற தொனிப்பொருளில் இன்று (23) மாலை கொழும்பு விகாரமஹாதேவி வெளியரங்க பீடத்தில் சோசலிச வாலிபர் சங்கத்தின் தலைமையில் பேரணி மற்றும் கலாசார இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜூலை 1983 கலவரத்தில் இறந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க்கிற்கு பேரணி ஆரம்பமாகவிருந்த போது, பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என பொலிஸார் தெரிவித்ததையடுத்து, குழுவாக லிப்டன் சுற்றுவட்டத்திற்குச் சென்று, கச்சேரி நடைபெற்ற இடத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டுள்ளனர்.
பல இடங்களில் நீர்த்தாரை தாக்குதல்கள் நடந்தபோதிலும், குழு வேறு வழிகளில் கச்சேரி நடைபெற்ற இடத்தை அடைந்தது. அங்கு திட்டமிட்டபடி பேரணி மற்றும் கச்சேரி நடைபெற்றது.










