ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைதுக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

0
186

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைதுக்கு எதிராக பொரளை பொலிஸ் நிலையத்துக்கு முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை (29) காலை முன்னெடுக்கப்பட்டது.

ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் திருட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (28) பொரளை பகுதியில் இடம்பெற்றபோதே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரினால் மூர்க்கத்தனமாக இழுத்து கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஊடகவியலாளர் பொரளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கையில் விலங்குடன் கைதுசெய்யப்பட்டு 17 மணித்தியாலங்கள் கடந்த நிலையில், மருத்துவ அதிகாரியிடம் அழைத்துச்செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here