மொட்டுக் கட்சியை பிளவுபடுத்தும் வேலையை ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக செய்து வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை அரசியலில் எதிர்பார்க்கலாம் என யாழ்ப்பாணத்தில் இன்று (02) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. எல்லாவற்றையும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சஜித் பிரேமதாச எங்கள் கூட்டணிக்கு தலைவரே தவிர எனக்கு தலைவர் அல்ல என பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.