அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு சென்ற 2 ஆயிரம் கடலட்டைகள் உயிருடன் மீட்பு

Date:

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று வியாழக்கிழமை (3) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஞ்சு கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை சாவடியில் வைத்து இராணுவத்தினரால் வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது கடலட்டைகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கடலட்டைகளும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...