கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அரசுப் புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஷ் சாலேவுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டபோது, தமக்கும் சிறைக்கு செல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது என தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜகத் மனுவர்ண தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
“இப்போது இலங்கையில் ஊழல், மோசடி போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். அதைத்தான் மக்களும் எதிர்பார்த்தனர். ஏனெனில் இது நீதியின் காலம். குறிப்பாக சுரேஷ் சாலேவின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், சுரேஷ் சாலேவை எங்களிடமிருந்து அல்ல, ராஜபக்சர்களிடமிருந்துதான் காப்பாற்ற வேண்டும். அதேபோல் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்டவர்களிடமிருந்தும் அவரை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பது அவர்களிடமிருந்துதான்.
எங்களுடைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சுரேஷ் சாலேவுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து கூறியிருந்தார். அவற்றைப் பார்த்தால் எனக்கே சிறைக்கு செல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது. உடைந்திருந்த பற்களைக்கூட சிகிச்சையளித்து பொருத்தியிருக்கிறார்கள். இப்போது அவர் மூக்கின் வழியாக அல்ல, வாயின் வழியாக உணவு உட்கொள்கிறார் என்று தீர்மானித்துள்ளார். அது நல்ல விஷயம். மேலும், சம்பந்தப்பட்ட கடவுச்சொற்களையும் வழங்க வேண்டும்.”
ஜகத் மனுவர்ண எம்.பி. இந்தக் கருத்துகளை நேற்று (02) தலாத்துஓய – கெர்சோபிரிட்ஜ் சாலை புனரமைப்பு பணிகளை பார்வையிட்டபோது ஊடகங்களிடம் தெரிவித்தார்.
